தருமபுரியில் இன்றுகாலை விபத்து அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர் சாவு

இவர்கள் இன்றுகாலை கல்லூரி பஸ்சை பிடிக்க முடியாமல் தவற விட்டனர்.தருமபுரி செல்லியம்மன் கோவில் அருகே வந்த போது அரசு பஸ் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
தருமபுரியில் இன்றுகாலை விபத்து அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர் சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள மேக்னாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் பெரியசாமி (வயது19). இவரது நண்பர் மூர்த்திகொட்டாய் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் (19). இவர்கள் இருவரும் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இன்றுகாலை கல்லூரி பஸ்சை பிடிக்க முடியாமல் தவற விட்டனர். இதனால் இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தருமபுரி செல்லியம்மன் கோவில் அருகே வந்த போது அரசு பஸ் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com