மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி

லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை.
மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி
Published on

படப்பை:

கடலூரை சேர்ந்தவர் தர்மதுரை(வயது29). இவர் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து குன்றத்தூர் நெடுஞ்சாலையில் நத்தம்பாக்கம் நோக்கி சென்றார். புதுநல்லூர் பகுதியில் வந்த போது மாடு ஒன்று திடீரென குறுக்கே வந்தது.

இதில் மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. கட்டுப்பாட்டை இழந்த தர்மதுரை மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த சிமெண்ட் கான்கிரீட் கலவை லாரி தர்மதுரை மீது மோதியது.

லாரியின் சக்கரத்தில் சிக்கிய தர்மதுரை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து பலியான தர்மதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குன்றத்தூர் நெடுஞ்சாலையில் அதிக அளவில் மாடுகள் சுற்றி வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com