போடி அருகே காதலியை கடத்தி சென்றதால் 2 குடும்பத்தினர் மோதல்

தனது மகளை காணாமல் பல இடங்களில் தேடி, போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.தனது மகளை கொண்டு வந்து ஒப்படைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டினார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடி ஜே.கே.பட்டி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது47). இவரது மகன் கோகுல் என்பவரும் போடி முதலியார் காலனியை சேர்ந்த ராஜா மகள் மோனிகா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு மாயமாகினர். தனது மகளை காணாமல் பல இடங்களில் தேடி பார்த்த ராஜா இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜா குடும்பத்தினர் போடி டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது போலீசார் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது ராஜா தனது மகளை கொண்டு வந்து ஒப்படைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக காமராஜை கத்தியை காட்டி மிரட்டினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் தலை மறைவான காதலர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com