என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லடம் அருகே விசைத்தறி உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை திருடிய இளம் பெண் கைது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
- கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பல்லடம் :
கடலூரைச் சேர்ந்த குருசாமி என்பவரது மகள் பவித்ரா (வயது 25). இவர் கேத்தனூரில் தங்கி அதே பகுதியில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் சுசீந்திரன் (50) என்பவரது வீட்டில் 7 பவுன் நகை திருட்டு போய் உள்ளது. இது குறித்து அவர் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காமநாயக்கன்பாளையம் போலீசார் கேத்தனூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் விசைத்தறி உரிமையாளர் சுசீந்திரன் வீட்டில் நகை திருடிய பவித்ரா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.