மதுக்கரை அருகே இளம்பெண் கள்ளகாதலனுடன் ஓட்டம்

இளம்பெண்ணுக்கு அந்த பகுதியை சேர்ந்த திருமணமாகாத வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இளம்பெண்ணின் கணவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மதுக்கரை அருகே இளம்பெண் கள்ளகாதலனுடன் ஓட்டம்
Published on

கோவை,

கோவை மதுக்கரை அருகே உள்ள மரப்பாலத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அந்த பகுதியை சேர்ந்த திருமணமாகாத வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கணவர் மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளகாதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பள்ளிக்கு சென்ற 5 வயது இளைய மகனை அழைத்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் தனது மகனுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். நீண்ட நேரம் ஆகியும் பள்ளிக்கு சென்ற மனைவி வராததால் அவரை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் கள்ளக்கா தலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com