களக்காடு அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

சிவகுமார் ஊச்சிகுளம் அருகே சென்ற போது சாலையோர உள்ள மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவகுமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
களக்காடு அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள ஊச்சிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது47). தொழிலாளி. இவர் சம்ப வத்தன்று களக்காட்டிற்கு வந்து விட்டு, ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டி ருந்தார். ஊச்சிகுளம் அருகே சென்ற போது சாலையோர முள்ள மின் கம்பத்தில் மோ ட்டார் சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவகுமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பச்சமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com