நெல்லையில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்

பெற்றோர் சொத்தில் மும்தாஜ் பங்கு கேட்டு அது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.மும்தாஜ் கழுத்தில் சேலையால் இறுக்கி தற்கொலைக்கு முயன்றார்.
நெல்லையில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்
Published on

நெல்லை:

விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். மும்தாஜின் பெற்றோர் வீடு அம்பையில் உள்ளது.

மும்தாஜின் பெற்றோர் சொத்தில் அவர் பங்கு கேட்டு அது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த சொத்தை பங்கு வைப்பது தொடர்பாக ஏற்கனவே மும்தாஜ் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் அங்குள்ள கூட்டரங்கில் மனு வாங்கிக் கொண்டிருக்கும்போது வந்த மும்தாஜ் திடீரென ரிப்பனால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றார்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து ரிப்பனை பிடுங்கினர். ஆனாலும் ஆத்திரம் தீராத அவர் கழுத்தில் சேலையால் இறுக்கி தற்கொலைக்கு முயன்றார்.

உடனே அவரை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com