என் மலர்
உள்ளூர் செய்திகள்

தையல் தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ., மருத்துவ வசதி செய்து தர வேண்டுகோள்
- மூத்த தையற் கலைஞா்களை கௌரவித்தல் காங்கயத்தில் நடை பெற்றது.
- சங்கத்தை சோ்ந்த மகளிா் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும்,
காங்கயம் :
தையற் கலைஞா்கள் தின விழாவையொட்டி, தமிழ்நாடு தையற்கலை தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் நல உதவிகள் வழங்குதல், மூத்த தையற் கலைஞா்களை கௌரவித்தல் காங்கயத்தில் நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:- தையல் தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு சாா்பில் வழங்கப்படும் பள்ளி இலவச சீருடை தைக்கும் பணியை எங்கள் சங்கத்தை சோ்ந்த மகளிா் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும், முன்பு இருந்ததுபோல மீண்டும் மின்சார கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






