தேவதானப்பட்டியில் தனியார் மில் ஊழியரை தாக்கி பைக் பறிப்பு

வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி பைக்கை ஒரு கும்பல் பறித்து சென்றனர்.புகாரின்பேரில் போலீசார் மர்மகும்பலை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேவதானப்பட்டி:

பெரியகுளம் வட கரையை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது27). இவர் தேவதானப்பட்டி அருகே எழுவனம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று பணி முடிந்து எழுவனம்பட்டி- செங்குளத்துப்பட்டி சாலையில் பன்றி பண்ைண அருகே வந்துகொண்டி ருந்தபோது ஒருவாலிபர் அவரை தடுத்து நிறுத்தினார். மேலும் பைக் சாவியை பறித்துக் கொண்டார்.

இதனைத் ெதாடர்ந்து மேலும் 3 பேர் அவரை சுற்றி வளைத்து பணம் கேட்டு மிரட்டினர். அதில் ஒருவர் கத்தியை எடுத்து குத்த முயன்றதால் பயந்த சவுந்தரபாண்டியன் பைக்கை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் பைக்கை திருடிச் சென்றனர். தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் கண்ணன், மாதவன் ஆகியோரிடம் இது குறித்து எடுத்து கூறி 3 பேரும் பன்றி பண்ணை பகுதியில் வந்து பார்த்தனர். ஆனால் மிரட்டிய நபர்கள் அங்கு இல்லை. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் மற்றும் கும்பலை தேடி வருகின்ற னர்.

X

Maalai Malar
www.maalaimalar.com