சூலூர் அருகே தோட்டத்தில் நிர்வாண நிலையில் கிடந்த ஆண் பிணம்

இந்த சம்பவம் கொலையா? என போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சூலூர் அருகே தோட்டத்தில் நிர்வாண நிலையில் கிடந்த ஆண் பிணம்
Published on

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் காடு குட்டை பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியாற்றி கொ ண்டிருந்தனர். அப்போது தோட்டத்தின் கம்பிவேலி பகுதி அருகே ஆண் பிணம் ஒன்று நிர்வாண நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கு நிர்வாண கிடந்த ஆணின் உடலை பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தவருக்கு 30 வயது இருக்கும் என தெரிந்தது.

உடனடியாக போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தோட்டத்தில் பிணமாக கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்துகின்றனர்.

மேலும் இவர் பெண் விவகாரத்தில் கொலை செய்யபட்டரா? மதுபோதையில் யாராவது அடித்து கொன்று யாராவது உடலை இங்கு கொண்டு வந்து வீசி சென்றனரா? அல்லது போதை தலைக்கேறிய நிலையில் இறந்தாரா? என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com