பெரும்பாறை அருகே வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ

ஏணிக்கல் வனப்பகுதியில் சாலைக்கு மேல் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.வனக்காப்பாளர் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் அங்கு சென்று 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீயில் சிக்கி மரங்கள் எரிந்து நாசமானது.
வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீயில் சிக்கி மரங்கள் எரிந்து நாசமானது.
Published on

பெரும்பாறை;

கொடைக்கானல் கீழ்மலை பெரும்பாறை, தடியன்குடிசை, கொங்கப்பட்டி, மஞ்சள்ப ரப்பு, புல்லாவெளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள புல்வெளிகள் கருகி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. கோடைக்காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி அதனை வனத்துறையினர் போராடி அணைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பெரும்பாறை, சித்தரேவு மலைப்பாதையில் உள்ள ஏணிக்கல் வனப்பகுதியில் சாலைக்கு மேல் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு வனவர் சுரேஸ் தலைமையில் வனக்காப்பாளர் கணேசன் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் அங்கு சென்று 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருந்தபோதும் வனப்பகுதியில் இருந்த அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து நாசமானது. மேலும் காட்டெருமை, கடமான் உள்ளிட்ட வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டது. அவை உணவு மற்றும் குடிநீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com