திண்டிவனம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி

சந்தேகம் அடைந்த இவரது உறவினர்கள் இவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.
திண்டிவனம் அருகே கிணற்றில் பிணமாக  மிதந்த விவசாயி
Published on

விழுப்புரம்:

திண்டிவனம் அருகே சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன். விவசாயி. இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த இவரது உறவினர்கள் இவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று இவரது மருமகன் விஜயகுமார் என்பவர் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் மோட்டார் இரைத்துக் கொண்டிருக்கும் போது, குப்பன் கிணற்றில் இறந்து கிடப்பதை பார்த்துள்ளார்.

தகவல் அறிந்த ரோஷணைபோலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று கிணற்றில் இறந்து கிடந்த குப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரோஷணை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com