படுகாயத்துடன் இறந்து கிடந்த மான்

மானை கைப்பற்றி சீர்காழி கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.நாய் துரத்தியதில் மான் முள்வேலியில் சிக்கி இறந்ததா?
காயங்களுடன் இறந்து கிடந்த மான்.
காயங்களுடன் இறந்து கிடந்த மான்.
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவின் பல்வேறு இடங்களில் மான்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

இதுபோல செம்பியன் வேலங்குடி பகுதியில் உள்ள கருவேலங்காட்டிலும் மான்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

இந்நிலையில் செம்பியன் வேலங்குடி பொறை வாய்க்கால் அருகே சுமார் 2 வயது உடைய பெண் புள்ளிமான் ஒன்று முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி வனச்சரகர் ஜோசப் டேனியல் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் புள்ளி மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த புள்ளிமான் நாய் துரத்தியதில் முள்வேலியில் மோதிய அதிர்ச்சியில் இறந்ததா, அல்லது வேறு காரணமா என தெரியவில்லை.

பிரேத பரிசோதனையின் முடிவிலேயே மான் இறப்பிற்கான முழுமையான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com