தனியார் வாகன நிறுத்துமிடமாக மாறிய பஸ் நிலையம்

தனியார் வாகன ஓட்டிகளின் வாகனம் நிறுத்தும் இடமாக இந்த பேருந்து நிலையம் மாறி உள்ளது.பேருந்து நிலையத்தை பயன்படுத்த, பேருந்து ஓட்டுநர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்
தனியார் வாகன நிறுத்துமிடமாக மாறிய பஸ்  நிலையம்
Published on

ஏரியூர்,

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் பென்னாகரம் மேச்சேரி வழியே பயணிக்கும் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தாமல் மெயின் ரோட்டிலேயே நின்று செல்வதால், இந்த பேருந்து நிலையம் பயன்பா டின்றி கிடக்கிறது,

இதன் காரணமாக தனியார் வாகன ஓட்டிகளின் வாகனம் நிறுத்தும் இடமாக இந்த பேருந்து நிலையம் மாறி உள்ளது.

சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி பொதுமக்களை இறக்கி ஏற்றுவதால், சிறு சிறு விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன்பு பேருந்து நிலையத்தை பயன்படுத்த, பேருந்து ஓட்டுநர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

X

Maalai Malar
www.maalaimalar.com