அன்னூர் அருகே 16 வயது சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபர்

பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர் வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.
அன்னூர் அருகே 16 வயது சிறுமி குளிப்பதை  எட்டிப்பார்த்த வாலிபர்
Published on

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் பின் பகுதியில் உள்ள குளியல் அறையில் குளிக்க சென்றார். குளியல் அறைக்கு கதவு இல்லாததால் சேலையை மறைத்துக்கொண்டு குளித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற 25 வயது வாலிபர் ஒருவர் கதவு இல்லாத குளியல் அறையில் சிறுமி குளிப்பதை பார்த்தார். பின்னர் அவர் சேலையை விலக்கி சிறுமி குளிப்பதை பார்த்து ரசித்தார். அப்போது அங்கு சிறுமியின் தாய் தனது மகள் குளிப்பதை வாலிபர் பார்ப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.

இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் உருட்டு கட்டையால் அந்த வாலிபரை தாக்கி தர்ம அடி கொடுத்தனர். அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் செங்காளிபாளையத்தை சேர்ந்த மில் தொழிலாளி ரமேஷ் (வயது 25) என்பது தெரிய வந்தது. பொதுமக்கள் தாக்கியதில் வாலிபருக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

X

Maalai Malar
www.maalaimalar.com