search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டெருமை
    X

    வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டெருமை

    • நாளுக்குள் நாள் வனவிலங்கு நடமாட்டம் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்
    • வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட பொதுமக்கள் கோரிக்கை

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளையொட்டி வனப்பகுதிகள் உள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள், காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து வருகிறது.

    அண்மைக்காலங்களாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக காட்டு யானைகள், காட்டெருமை போன்றவை அடிக்கடி ஊருக்குள் வந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சர்வசாதாரணமாக சுற்றி திரிந்து வருகின்றன. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள முடிஸ் எஸ்டேட் பஜார் பகுதியில் பொதுமக்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது வனத்தை விட்டு வெளியேறிய காட்டெருைம ஒன்று நகர பகுதிக்குள் புகுந்தது. முடிஸ் பஜார் பகுதியில் சிறிது நேரம் அந்த காட்டெருமை சுற்றி திரிந்தது. காட்டெருமை வருவதை பார்த்ததும் பொதுமக்கள் வீடுகளுக்குள் சென்று விட்டனர். சிலர் அங்கிருந்த கடைகளுக்கு சென்று தஞ்சம் அடைந்து கொண்டனர்.

    சில மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே சுற்றி திரிந்த காட்டெருமை பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது. அதன்பிறகே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில காலங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களிலேயே ஊருக்குள் புகுந்து சுற்றி திரிந்து வருகிறது.

    நாளுக்குள் நாள் வனவிலங்கு நடமாட்டம் அதிகரிப்பதால், வெளியில் வரவே அச்சமாக உள்ளது. எனவே வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×