கூடலூர் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.முகேஷ் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது
கூடலூர் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
Published on

ஊட்டி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 12 வயது சிறுமி.

இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் திருப்பூரில் வேலை பார்த்து வருவதால் மாணவி, தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

இவரது வீட்டின் அருகே வசித்து வருபர் முகேஷ்(வயது19). சம்பவத்தன்று மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த முகேஷ் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சியான மாணவி, தனது தாய் வீட்டிற்கு வந்ததும், நடந்த சம்பவங்களை கூறி அழுதார். இதை கேட்டு பதறிபோன அவர் சம்பவம் குறித்து கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு முகேஷ் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் முகேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com