பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாள் விழா - உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.தினத்தந்தி குழுமத்தினர் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாள் விழா - உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை
Published on

சென்னை:

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ படத்திற்கு தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் குடும்பத்தினரும் மரியாதை செலுத்தினர்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ படத்திற்கு தினத்தந்தி குழும நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com