கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்திய 850 பேர் மீது வழக்கு

கடலூர் மாவட்டத்தில் மாலை நேரங்களில் பொது இடங்களில் மது அருந்தி விட்டு அதன் காரணமாக ஏற்படும் காய வழக்குகள், கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சண்டை வழக்குகள் என 850 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு
வழக்கு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தும் நபர்களால் பொது மக்களுக்கு இடையூறுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை உருவானால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அது குறித்து உடனடியாக போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், புதிய காவல் உதவி எண்களை அறிமுகம் செய்தார்.

அந்த எண்கள் மூலம் வந்த புகாரின் அடிப்படையில். கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்து வோரை கட்டுப்படுத்தும் விதமாக காவல் அதிகாரிகள் , காவலர்கள் மாலை நேரத்தில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் போலீசாரின் அறிவுரையை பின்பற்றாத 850 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் கடலூர் மாவட்டத்தில் மாலை நேரங்களில் பொது இடங்களில் மது அருந்தி விட்டு அதன் காரணமாக ஏற்படும் காய வழக்குகள், கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சண்டை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குபதிவு எண்ணிக்கை குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com