மாவட்டத்தில் ஒரே நாளில் 85 மி.மீ. மழை பெய்தது

நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது.சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்து தொடங்கியது.
மாவட்டத்தில் ஒரே நாளில் 85 மி.மீ. மழை பெய்தது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயில் சுட்டெரிப்பதும், இரவில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.

நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.

சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்து தொடங்கியது.

ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்தது.

தஞ்சை, வல்லம், ஒரத்தநாடு, பாபநாசம், வெட்டிக்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒரே நாளில் 85.80 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.

இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழை அளவு மி.மீ.யில் வருமாறு:-

வெட்டிக்காடு -19.40, பாபநாசம் -17, நெய்வாசல் தென்பாதி - 9.40, வல்லம் -7, குருங்குளம் -6.80, அய்யம்பேட்டை -4, தஞ்சாவூர்-2.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com