search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுகாதார நடை சாலை திறப்பு
    X

    நடை பயிற்சி சாலையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் கலெக்டர் லட்சுமிபதி, சண்முகையா எம்.எல்.ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

    தூத்துக்குடியில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுகாதார நடை சாலை திறப்பு

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்டி அமைக்கப்பட்ட ‘ஹெல்த் வாக்’ சாலை இன்று திறக்கப்பட்டது.
    • தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலை மாதா கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்டி அமைக்கப் பட்ட 'ஹெல்த் வாக்' சாலை இன்று திறக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட் டத்தில் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலை மாதா கோவில் அருகே அமைக்கப் பட்டிருந்த விழா மேடையில் இருந்து அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சப்- கலெக்டர் கவுரவ்குமார், சுகாதார பணிகள்துணை இயக்குனர் பொற்செல்வன் ஆகியோர் பார்வை யிட்டனர்.

    அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாதா கோவில் அருகே இருந்து தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோ நகர், ரோச் பூங்கா, படகு குழாம் வரை 4 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி மாதா கோவில் முன்புறம் முடிவடையும் (ஹெல்த் வாக் சாலை) நடைப்பயிற்சி நடை பாதையில், கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் காலை 6 மணிக்கு பொதுமக்களுடன் சென்று நடை பயிற்சி மேற்கொண்டனர்.

    இதில் அரசு மருத்து வர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள், செவிலி யர்கள் சுகாதாரத்துறையி னர் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    Next Story
    ×