

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி நகர தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர தி.மு.க. செயலாளர் நவநீதபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில மகளிரணி பிரசார குழு செயலாளர் ஜெசிபொன்ராணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள்சுடலை, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினருமான ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மகளிர் அணி நிர்வாகிகள் 8 பேருக்கு கனிமொழி எம்.பி. சார்பில் கைக்கடிகாரங்களை நவநீத பாண்டியன் வழங்கினார். தொடர்ந்து நடந்த உறுப்பினர்கள் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சாரதா பொன்இசக்கி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, துணை அமைப்பாளர் தயாநிதி பாண்டியன், சமூக வலைதள பொறுப்பாளர் நித்யா, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் ரேவதி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.