search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத 790 பேருக்கு அனுமதி
    X

    கோப்பு படம்.

    தேனி மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத 790 பேருக்கு அனுமதி

    • ஹால்டிக்கெட்டை தரவிரக்கம் செய்து தேர்வு நடைபெறும் மையமான முத்துதேவன்பட்டி வேலம்மாள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

    தேனி:

    மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நீட் நாளை நாடு முழுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 790 மாணவ-மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவர்கள் தேசிய தேர்வு முகமை வழிகாட்டுதலின்படி தங்கள் ஹால்டிக்கெட்டை தரவிரக்கம் செய்து தேர்வு நடைபெறும் மையமான முத்துதேவன்பட்டி வேலம்மாள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் எவ்வித எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×