என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை கடையின் பூட்டை உடைத்து 7 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
    X

    நகை கடையின் பூட்டை உடைத்து 7 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி–யடைந்தார்.
    • கால் கொலுசு, அருணாகொடி, கை காப்பு, கால் காப்பு என 7 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை யடித்து சென்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பராப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன். அவரது மனைவி மைதிலி. இவர் பாப்பாரப்பட்டியில் உள்ள கடைவீதியில் வெள்ளி நகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மைதிலி கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை மீண்டும் கடையை திறக்க வந்து பார்த்தபோது அங்கு கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி–யடைந்தார்.

    உடனே உள்ளே சென்று பார்த்தபோது கால் கொலுசு, அருணாகொடி, கை காப்பு, கால் காப்பு என 7 கிலோ வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மைதிலி பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த நகை கடையை பார்வையிட்டனர். இதனிடையே மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×