என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆம்னி வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி மற்றும் கைதான தாமோதரனை படத்தில் காணலாம்.
குமாரபாளையத்தில் 50 மூட்டை ரேசன்அரிசி, ஆம்னி வேன் பறிமுதல்
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கே.ஓ.என்.தியேட்டர் அருகே ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி வசந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதிக்கு அவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒருவர், ரேசன் அரிசி மூட்டைகளை வாங்கி ஆம்னி வேனில் வைத்துக்கொண்டு இருந்தார்.
அவரை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஈரோடு மாவட்டம் பவானி, குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தாமோதரன் (வயது 45), என்பது தெரியவந்தது. தாமோதரன் ஆம்னி வேனில் 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தார். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை, குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகள், ஆம்னி வேனை ஒப்படைத்தனர். இதையடுத்து தாமோதரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






