மருதமலை முருகன் கோவிலுக்கு 5 அறங்காவலர்கள் நியமனம்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு 5 அறங்காவலர்கள் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மருதமலை முருகன் கோவிலுக்கு 5 அறங்காவலர்கள் நியமனம்
Published on

கோவை,

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்காக பலர் விண்ணப்பித்து இருந்தனர். அந்த விண்ணப்பங்களை மாநிலகுழு ஆய்வுசெய்து, இதற்கான பரிந்துரை பட்டியலை இந்து சமய அறிநிலைய ஆணையருக்கு அனுப்பி வைத்து உள்ளது. அதன்படி வடவள்ளி ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்து மகேஷ்குமார், நஞ்சுண்டாபுரம் ஜெயக்குமார், சங்கனூர் பிரேம்குமார், சொக்கம்புதூர் கனகராஜ், தொண்டாமுத்தூர் விராலியூரை சேர்ந்த சுகன்யா ராசரத்தினம் ஆகிய 5 பேர் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் பரம்பரை சாராத அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் அடுத்த 2 ஆண்டுகள் வரை பதவியில் இருப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com