search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில்  4 நாட்கள் புகைப்படக் கண்காட்சி:எம்.பி., எம்.எல்.ஏ., பங்கேற்கிறார்கள்
    X

    கள்ளக்குறிச்சியில் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்த காட்சி.

    கள்ளக்குறிச்சியில் 4 நாட்கள் புகைப்படக் கண்காட்சி:எம்.பி., எம்.எல்.ஏ., பங்கேற்கிறார்கள்

    • கள்ளக்குறிச்சியில் தனியார் திருமண மண்ட பத்தில் இன்று முதல் வருகிற 16- ந் தேதி வரை 4 நாட்கள் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.
    • கண்காட்சியை பொது மக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிட லாம் என கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்ப கத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டல அலுவலகம் சார்பில் கள்ளக்குறிச்சியில் தனியார் திருமண மண்ட பத்தில் இன்று முதல் வருகிற 16- ந் தேதி வரை 4 நாட்கள் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச யோகாதினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை ஆகிய மையக்கருத்துக்களில் இந்த ஒருங்கிணைந்த கண்காட்சி நடைபெறுகின்றது. இன்று நடைபெறும் கண்காட்சி தொடக்க விழாவில் நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர் கவுதம சிகாமணி, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ, நகர மன்ற தலைவர் சுப்பராயுலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மேலும் 14- ந் தேதி காலை ஊராட்சி மன்றத் தலைவர் களுக்கான சிறப்பு கருத்தரங் கமும், மாலை நகராட்சி தூய்மைப் பணியாளர் களுக்கான சிறப்பு கருத் தரங்கமும் நடைபெறு கின்றது. 15- ந் தேதி தேதி முற்பகல் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கான சிறப்பு அமர்வும், மாலை அங்கன்வாடி பணியா ளர்கள், வளர் இளம் பெண்களுக்கான சிறப்பு அமர்வும் நடைபெறுகின்றது. 16- ந் தேதி காலை கல்லூரி மாணவர்களுக்கு பூமியைக் காப்போம் மனிதம் வளர்ப்போம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி யும், மாலை பள்ளி மாண வர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஓவியப்போட்டி யும் நடைபெறுகின்றது. கண்காட்சியில், ஊட்டச் சத்து அரங்கு, ஆதார் திருத்த அரங்கு, காசநோய் அரங்கு, சுகாதாரத் துறை அரங்கு, மகளிர் திட்ட அரங்கு, சமூக நலத்துறை அரங்கு, மருத்துவ மூலிகை அரங்கு ஆகிய வைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த கண்காட்சியை பொது மக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிட லாம் என கூறினார். அப்போது மத்திய மக்கள் தொடர்பாக புதுச்சேரி கள அலுவலக துணை இயக்கு னர் முனைவர் சிவக்குமார், கள விளம்பர உதவி அலுவலர்கள் வீரமணி (புதுச்சேரி), போஸ்வெல் ஆசீர் (மதுரை), தியாகராஜன் (தருமபுரி) ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×