search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவன்மலை கோவிலில் 3-வது நாள் தேரோட்டம் - 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
    X

    சிவன்மலை கோவிலில் 3-வது நாள் தேரோட்டம் - 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

    • 1.25 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகரை வழிபட்டனர்.
    • 4 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகர், வள்ளி, தெய்வானை தெய்வங்களை வழிபட்டனர்.

    காங்கயம் :

    காங்கயம் பக்கமுள்ள சிவன்மலையில் மலை மீது குடி கொண்டுள்ள முருகர், வள்ளி, தெய்வானை ஆகிய சமேத தெய்வங்களின் வருடாந்திர தைப்பூச திருவிழாவின் உச்சகட்ட சிறப்பு நிகழ்ச்சியான 3 நாள் தேராட்டம் தொடங்கி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி மாலை ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் தேைர வடம் பிடித்து இழுத்தனர். அன்று இரவு முழுவதுமாக சுமார் 1.25 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகரை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து 2-வது நாள் தேரோட்டம் நடந்தது.

    பின்னர் நேற்று மதியம் 3-வது நாள் தேரோட்டம் தொடங்கியது. அப்போது சர்வ கட்சியினர், உபயதாரர்கள், காவடி குழுவினர் உள்பட பல்லாயிரகணக்கான பக்தர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் நேற்று 2-வது நாளான நேற்று நடந்த தேரோட்டத்திலும், விழாவிலும் பங்கு கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பின்னர் இரவு 7 மணியளவில் தேர் நிலை சேர்ந்தது. 3 நாட்கள் நடந்த தேர் திருவிழா நிகழ்ச்சியில் மொத்தம் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகர், வள்ளி, தெய்வானை தெய்வங்களை வழிபட்டனர்.

    விழாவில் எல்லப்பாளையம் காவடி குழுவை சேர்ந்த சூரிய நாட்டு அய்யன் கோவில் நிர்வாகம் மூலமும், சிவன்மலை சோமவார சன் மார்க்க சங்க நிர்வாகம் மூலமும் 4 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விழாவில் வருகிற 14-ந்தேதி திருமலைக்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    Next Story
    ×