search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே குளத்தில் மண் திருடிய 3 பேர் கைது- ஜே.சி.பி., வாகனங்கள் பறிமுதல்
    X

    கடையம் அருகே குளத்தில் மண் திருடிய 3 பேர் கைது- ஜே.சி.பி., வாகனங்கள் பறிமுதல்

    • குளத்தில் இருந்து செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தப்பியோட முயன்ற 3 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

    நெல்லை:

    கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் உள்ள ஒரு குளத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளைகளுக்கு குளத்து மண் அள்ளப்படுவதாக கடையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக டிராக்டர் மற்றும் டிப்பர் லாரியில் குளத்து மண்ணை சிலர் அள்ளிக்கொண்டிருந்தனர்.

    போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில் அவர்களில் 3 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். ஒருவர் தப்பியோடிவிட்டார்.

    பிடிபட்ட 3 பேரிடமும் நடத்திய விசாரணையில், ஜே.சி.பி. உரிமையாளர் கீழமாதாபுரத்தை சேர்ந்த குருபிரசாத்(வயது 23), லாரி டிரைவர் சென்னல்தா புதுக்குளத்தை சேர்ந்த அய்யாத்துரை, டிராக்டர் டிரைவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கொல்லன் சர்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அவர் களை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக லாரி மற்றும் டிராக்டர் உரிமை யாளரான கடையம் அருகே உள்ள செட்டியூரை சேர்ந்த பொன்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர். மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., டிராக்டர், டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×