தேனி அருகே இளம்பெண் உள்பட 3 பேர் மாயம்

தேனி மாவட்டத்தில் வெவ்வேறு பிரச்சினைகளில் இளம்பெண் உள்பட 3 பேர் மாயமாகினர்.போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் மகன் ஹரிநாத்கோகுல் (வயது24). இவர் அப்பகுதி யில் உள்ள தனியார் நிறுவன த்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது தாயுடன் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்ற போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் ஹரிநா த்கோகுல் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அல்லிநகரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேவனதாப்பட்டி அருகே ஜி.அம்சாபுரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் (39). இவரது மனைவி பிரியங்கா (27). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாண்டியராஜன் லாரி டிரைவராக உள்ளதால் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வீடு திரும்பியபோது பிரியங்கா வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடை க்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

கூடலூரை சேர்ந்த பிரபு (39). சலூன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தனது மகனுக்கு உணவு வாங்கி கொடுத்து விட்டு மாத்திரை வாங்குவதற்காக சென்றார். அதன்பின்ன ர்வீடு திரும்பவில்லை. இது குறித்து கூடலூர் வடக்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து மாயமான பிரபுவை தேடி வரு கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com