பெரியகுளம் அருகே இளம்பெண்கள் உள்பட 3 பேர் மாயம்

குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண்கள் உள்பட 3 பேர் மாயமாகினர்.போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே பங்களாபட்டியை சேர்ந்தவர் ரவி மகள் ரித்திகா (வயது17). இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.

சம்பவத்தன்று வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கா ததால் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரித்திகாவை தேடி வருகின்றனர்.

மேல்மங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரூபாவாணன் (22). இவர் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உத்தமபாளையம் அருகே அணைப்பட்டியை சேர்ந்தவர் பொம்மன் மகள் தீபா (16). இவர் 11-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com