படப்பை அருகே 3 துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கியது

காரில் இருந்து இறங்கிய 3 பேர் டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை நோக்கி சென்றனர். டீ கடை அருகே 3 துப்பாக்கி தோட்டாக்கள், தோட்டக்களை லோட் செய்யும் ஹேண்டில்யும் விட்டு சென்றனர்.
படப்பை அருகே 3 துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கியது
Published on

சோமங்கலம்:

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு தாம்பரம் தர்காஸ் செல்லும் சாலையில் தர்காஸ் பகுதியில். டீக்கடை உள்ளது. நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்தவர் இறங்கி டீக்கடைக்கு சென்று மாஸ்க் வாங்கி உள்ளார்.

அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து வெள்ளை நிற கார் ஒன்று டீக்கடை எதிரே வந்தது.

அப்போது காரில் இருந்து இறங்கிய 3 பேர் டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை நோக்கி சென்றனர். அவர்களில் ஒருவர் கத்தியுடன் சென்றார். இதை கேட்டதும் ஹெல்மெட் அணிந்திருந்தவர் டீ கடையின் உள்ளே மாடியில் ஏறி பின்பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவர் வழியாக குதித்து ஓடியுள்ளார். மற்றொருவர் வேறொரு திசையில் ஓடி உள்ளார். காரில் வந்தவர்களும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

அப்போது டீ கடை அருகே 3 துப்பாக்கி தோட்டாக்கள், தோட்டக்களை லோட் செய்யும் ஹேண்டில்யும் விட்டு சென்றனர். இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று துப்பாக்கி தோட்டாக்களை கைப்பற்றினர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் யார்? ரவுடிகளுக்குள்ளே கோஷ்டி மோதலா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சோமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிள் உள்ள ரவுடிகளுக்குள் ஏதேனும் மோதல் ஏற்பட்டு பழி வாங்க வந்தனரா? துப்பாக்கி எடுத்து வரும்போது தோட்டாக்கள் சிதறி விழுந்தனவா? என்பது குறித்து 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்து தப்பி ஓடிய நபர்களின் மோட்டார் சைக்கிளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் அது போலி பதிவு எண் கொண்டது என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com