வணிகர்கள் புகார் தெரிவிக்கலாம்- தமிழக அரசு உத்தரவு

வணிக வரித்துறையைச் சார்ந்த அலுவலர்களின் சேவை குறைபாடு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் பெறப்படுகிறது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

சென்னை:

வணிக வரித்துறையைச் சார்ந்த அலுவலர்களின் சேவை குறைபாடு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை பரிசீலனை செய்யும் வகையில் கடந்த 1-ந்தேதி முதல் சென்னை சேப்பாக்கம், எழிலகத்தில் உள்ள வணிக வரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் பிரிவு செயல்படுகிறது. 

பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை புகார்களை 044-2851 4250 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். புகார்களை ctdpetition@ctd.tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com