என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  மதுரை மாவட்டத்தில் மார்ச் மாத பஸ் பாஸை ஜூன் 15 வரை பயன்படுத்தலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை மண்டலத்துக்குட்பட்ட அரசு பேருந்துகளில் மார்ச் மாத பஸ் பாஸை ஜூன் 15 வரை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  மதுரை:

  மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை மண்டலத்தில் ரூ.1000 மாதாந்திர சலுகை கட்டண பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஆயிரம் ரூபாய் பாஸ் எடுத்தவர்கள் அதைப் பயன்படுத்தி 16.3.2020 முதல் 15.4.2020 வரை பஸ்களில் பயணம் செய்திருக்க முடியும்.

  இதற்கிடையே கொரோனா தடுப்பு தொடர்பாக 25.3.2020 முதல் பொது பஸ் சேவை நிறுத்தப்பட்டது. ஜூன் 1-ந்தேதி முதல் 50 சதவீத பொது பஸ் சேவை தொடங்கியுள்ளது.

  இதனால் ஏற்கெனவே பெற்ற ரூ.ஆயிரம் மாதாந்திர சலுகை கட்டண பாஸை பயன்படுத்தி ஜூன் 15 வரை பஸ்களில் பயணம் செய்யலாம்.

  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  இந்த அறிவிப்பால் மதுரை மண்டலத்தில் ஆயிரம் ரூபாய் பாஸ் வாங்கிய 16,882 பேர் பயனடைவர்.
  Next Story
  ×