காரிமங்கலம் சந்தைகடையில் மான் கறி விற்பனை.. வேட்டையாடி வந்த 2 இளைஞர்கள் கைது| #Dharmapuri

மான் கறி விற்பதாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.வெள்ளிமலை கிராமத்திற்கு அருகில் உள்ள காப்புக் காட்டில் மானை வேட்டையாடினர்.
காரிமங்கலம் சந்தைகடையில் மான் கறி விற்பனை.. வேட்டையாடி வந்த 2 இளைஞர்கள் கைது| #Dharmapuri
Published on

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் சந்தைகடை பகுதியில் மான் கறி விற்பதாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து வனக்காவலர்கள் விரைந்து சென்று சம்பவ இடத்தில் கண்காணித்ததில் 2 வாலிபர்கள் மாமிச பொட்டலங்களுடன் இருந்து தெரிய வந்தது.

அவர்களை பிடித்து வனக்காவலர்கள் விசாரணை நடத்தினர். 

 அவர்களில் ஒருவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெள்ளிமலை கிராமத்தை சேர்ந்தவர் அஜித் ( 25 ) என்பதும், மற்றொருவர் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த சரவணன் (22) என்பதும் தெரியவந்தது. 

இருவரும் சேர்ந்து அரூர் வெள்ளிமலை கிராமத்திற்கு அருகில் உள்ள காப்புக் காட்டில் மானை வேட்டையாடி அறுத்து கறியாக பொட்டலம் கட்டி காரிமங்கலம் பகுதியில் விற்பனை செய்ததையும் ஒப்புக் கொண்டனர். 

அதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர் மாமிசம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com