பாளையில் அரிவாளை காட்டி மிரட்டி வியாபாரியிடம் வழிப்பறி - 2 வாலிபர்கள் கைது

நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐ.ஓ.பி. காலனி பகுதியில் பைபாஸ் சாலையில் சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்த வியாபாரி கண்ணையா (வயது 48) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.பாளை அன்னை இந்திரா நகரை சேர்ந்த நம்பிராஜன் (20) மற்றும் சீவலப்பேரி காட்டாம்புலியை சேர்ந்த ஜெரின் (23)ஆகிய 2 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து கண்ணையாவை வழிமறித்து அரிவாள் முனையில் மிரட்டினர்.
பாளையில்   அரிவாளை காட்டி மிரட்டி வியாபாரியிடம் வழிப்பறி - 2 வாலிபர்கள் கைது
Published on

நெல்லை:

நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐ.ஓ.பி. காலனி பகுதியில் பைபாஸ் சாலையில் சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்த வியாபாரி கண்ணையா (வயது 48) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே பாளை அன்னை இந்திரா நகரை சேர்ந்த நம்பிராஜன் (20) மற்றும் சீவலப்பேரி காட்டாம்புலியை சேர்ந்த ஜெரின் (23)ஆகிய 2 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து கண்ணையாவை வழிமறித்து அரிவாள் முனையில் மிரட்டினர்.

மேலும் அவரிடம் இருந்து ரூ.18 ஆயிரத்தை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கண்ணையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து நம்பிராஜன், ஜெரின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com