சின்னமனூரில் 2 இளம்பெண்கள் மாயம்

குடும்ப பிரச்சினையால் இளம்பெண்கள் மாயமாகினர்.போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

சின்னமனூர் 27-வது வார்டு அய்யனார்புரம் 2 வது தெருவைச் சேர்ந்த குமரேசன் மனைவி பிரியங்கா (வயது 24).

சம்பவத்தன்று குமரேசன் வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது அவரது மனைவியை காணவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதே போல துரைசாமிபுரம் முத்தையா கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகள் ரூபினி (17) என்பவர் வீட்டில் இருந்து மாயமானார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com