தேனி அருகே 2 பெண்கள் மாயம்

தேனி அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமாகினர்.புகாரின்பேரில் மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வருசநாடு:

தேனி அருகே கடமலை க்குண்டுவை சேர்ந்தவர் பெத்தன் மகள் நிவேதா(17). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் சம்பவ த்தன்று வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத தால் கடமலை க்குண்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நிவே தாவை தேடி வருகின்றனர்.

கம்பத்தை சேர்ந்தவர் பொன்ராம் மகள் ஹரிதாதேவி(20). இவர் உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காத தால் கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com