சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலா 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம் அருகே  சாராயம் விற்ற 2 பேர் கைது
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன்(வயது30) என்பவர் அவரது வீட்டில் சாரயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று, அதேபகுதியை சேர்ந்த சக்திவேல்(24) என்பவர் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடன் அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தலா 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com