மதுப்பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

திருக்கோவிலூர் சந்தப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் மது பாட்டில்கள் விற்பதாக தகவல் வந்தது.மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த ரத்தினம் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் மற்றும் சேகர் (53) என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டார்.
மதுப்பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
Published on

 கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூர் சந்தப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் மது பாட்டில்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற சப் -இன்ஸ்பெக்டர் சதீஷ் நடத்திய அதிரடி வேட்டையில் அங்கு மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த ரத்தினம் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் பல்லவாடி கிராமத்தில் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் சேகர் (53) என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 8 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் திருக்கோவிலூர் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com