என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பேர் மாயம்
  X

  கோப்பு படம்.

  தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பேர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இவர் தனியார் வங்கிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
  • பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

  தேனி:

  தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் முருகன் மகள் கமலீஸ்வரி (வயது22). இவர் தனியார் வங்கிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகள் தரணிஸ்ரீ (15). இவர் தேனியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×