search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருசநாடு அருகே கருங்காலி மரக்கட்டைகளை கடத்திய 2 பேர் கைது
    X

    கருங்காலி மரக்கட்டைகள்.

    வருசநாடு அருகே கருங்காலி மரக்கட்டைகளை கடத்திய 2 பேர் கைது

    • வாலிப்பாறை பகுதியில் கருங்காலி மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது
    • சோதனையிட்டதில் 2 கருங்காலி மரக்கட்டைகள் கடத்திய 2 பேரிடம் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள வாலிப்பாறை பகுதியில் கருங்காலி மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை யினர் தும்மக்குண்டு அருகே தேனி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ெகாண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வைத்திருந்த சாக்குபையை வாங்கி சோதனை யிட்டதில் 2 கரு ங்காலி மரக்க ட்டை கள் இருந்தது தெரிய வந்தது.

    அவர்களை வன ச்சரக அலுவலக த்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இந்த கட்டைகளை கடத்திய தும்மக்கு ண்டுவை சேர்ந்த அன்பு, தேனியை சேர்ந்த நரிக்குறவர் சுதாகர் என தெரியவரவே அவர்களை கைது செய்த னர். அவர்களிடமிருந்து ரூ.20ஆயிரம் மதிப்பிலான கருங்காலி மரக்கட்டைகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வருசநாடு வனச்சரக த்திற்குட்பட்ட பகுதியில் அரியவகை மரங்கள் உள்ளன. குறிப்பாக கருங்காலி மரக்கட்டைகள் என்பது பல ஆண்டுகள் நிலைத்து வளரும் உறுதி யான மரமாகும். இந்த மரங்களை வெட்டி அதிலிருந்து ஜபமாலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு மாலையின் விலை ரூ.10ஆயிரம் முதல் பல ஆயிரம் வரை விலை கொண்டதாகும்.

    இதனை அவரவர்கள் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளியாலான கம்பி களால் கோர்த்து பயன்படு த்தி வருகின்றனர். இதுபோ ன்ற அபூர்வ வகை மரக்க ட்டைகள் சர்வசாதாரண மாக கடத்தப்பட்டு வருகிறது. இதனைவெட்டும் போதே பிடிக்காமல் கடத்தி கொண்டுவரும்போது பிடித்து அபராதம் வசூலிக்கின்றனர். அபராதம் கட்டத்தவறினால் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர்.

    கடந்த 2 மாதங்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கருங்காலி மரக்கட்டைகள் கடத்தப்பட்டுள்ளன. வனப்பகுதியில் தீ வைத்தும் மரக்கட்டைகளை கடத்தும் வேலையில் சமூகவிரோத கும்பல் ஈடுபட்டு வருகின்ற னர். எனவே இவ்விசயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×