

தேனி :
தேனி அருகே உத்தமபாளையம் அணைப்பட்டியை சேர்ந்தவர் சுருளிச்சாமி மகள் வசந்தா(28). இவருக்கு திருமணமாகி கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். குழந்தைகள் இல்லாத நிலையில் கோவையில் வேலைபார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய அவர் கம்பத்திற்கு வேலை தேடி செல்வதாக கூறிச்சென்றார்.
அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே பாலகோம்மை ராயவேலூரை சேர்ந்தவர் மன்னார் மகள் பேச்சியம்மாள்(16). இவர் கடந்த சில நாட்களாக செல்போனில் ஒருவருடன் பேசி வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டில் தூங்கிகொண்டிருந்த பேச்சியம்மாள் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்ேபரில் ராஜதானி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பேச்சியம்மாளை தேடி வருகின்றனர்.