உடன்குடி அருகே பெண்ணை கத்தியால் குத்தி 17 பவுன் நகைபறிப்பு- மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு

வீட்டில் ஸ்மைலா மட்டும் தனியாக இருந்தபோது மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து கத்தியால் ஸ்மைலாவை குத்தினார்.ருபிஸ்டைன் வீட்டில் இருந்த 17 பவுன் நகை, பீரோவில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
உடன்குடி அருகே பெண்ணை கத்தியால் குத்தி 17 பவுன் நகைபறிப்பு- மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு
Published on

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள கல்லாமொழியை சேர்ந்தவர் ருபிஸ்டைன். இவரது மனைவி ஸ்மைலா (வயது 36).

கத்திக்குத்து

ருபிஸ்டன் மீன்படி வேலை செய்து வருகிறார். அவர் நேற்று அதிகாலை வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டார். வீட்டில் ஸ்மைலா மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்மைலா சத்தம் போட்டார். உடனே மர்மநபர் கத்தியால் ஸ்மைலாவை குத்தினார்.

17 பவுன் நகை கொள்ளை

இதில் அவரது உடலில் 3 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் மர்ம நபர் அங்கிருந்த 17 பவுன் நகை, பீரோவில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளை யடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

கொள்ளையன் கத்தியால் குத்தியதில் காயமடைந்த ஸ்மைலா திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக அவர் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்–ெபக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com