search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை வந்த வெளிநாட்டு பயணிகள் 162 பேர் கண்காணிப்பு
    X

    கோவை வந்த வெளிநாட்டு பயணிகள் 162 பேர் கண்காணிப்பு

    • ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையில் படுக்கைகள் உள்ளது.
    • வெளிநாட்டு பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

    கோவை,

    சீனா, அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய பி.எப்.7 என்ற புதிய வகை ெகாரோனா நோய்த் தொற்று பரவி வருகிறது. இதனையடுத்து நாட்டிலுள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் மருத்துவ மையங்கள் அமைத்து ெகாரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    தவிர வெளிநாட்டு பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கடந்த 2 நாட்களில் பன்னாட்டு விமானத்தில் கோவை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு பயணிகள் 8 பேரிடம் ெகாரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப் பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு பயணிகள் 162 பேர் சுகாதாரத் துறை சார்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர்அருணா கூறியதாவது:-

    வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளில் ெகாரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து முடிவுகள் கிடைக்கும் வரை சுகாதாரத் துறையின் கண்காணிப்பு மையத்தில் வைத்திருக்கவும், அறிகுறிகள் இல்லாதவர்களில் 2 சதவீதம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அறிகுறிகள் இல்வாதவர்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களிடம் ெகாரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர, வெளிநாட்டு பயணிகளை 14 நாட்கள் வரை தொலைபேசி வழியாக கண்காணிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 162 பேருக்கும் எந்தவித அறிகுறியும் இல்லை. இவர்களில் ரேண்டம் முறையில் 8 பேரிடம் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் சுகாதார ஆய்வாளர்களை வெளிநாட்டு பயணிகளை தொலைபேசி வழியாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்து மொத்தம் சுமார் 12 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

    அதேபோன்று, நோயாளிகளுக்கு அளிப்பதற்கான ஆக்சிஜன் கட்டமைப்பு வசதியும் நம்மிடம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை அரசு ஆஸ்பத்திரி அதிகாரிகள் கூறும்போது, கோவை அரசு மருத்துவமனையில் தற்போது யாரும் ெகாரோனாவுக்கு சிகிச்சை பெறவில்லை. இருப்பினும், ெகாரோனா நோயாளிகளுக்கான 30 படுக்கைகள் கொண்ட வார்டு உள்ளது. மருத்துவமனையில் சுமார் 1,500 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு வசதி உள்ளது.

    கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறும்போது,

    இங்கு ெகாரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. தொற்று அதிகரித்தால் அதற்கேற்ப அவை பயன்படுத்தப்படும் என்றனர்.

    Next Story
    ×