search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லணையில் 1000 கலைஞர்களின் நாட்டியாஞ்சலி
    X

    நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

    கல்லணையில் 1000 கலைஞர்களின் நாட்டியாஞ்சலி

    • காவிரித்தாய், மற்றும் விவசாயிகளை பெருமைப்படுத்தும் விதமாக ‘பசுமையும் பரதமும் 2022’ நிகழ்ச்சி கல்லணையில் நடைபெற்றது.
    • நாட்டிய கலைஞர்கள் பச்சை ஆடையில் அணிவகித்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தினர்.

    பூதலூர்:

    காவிரி டெல்டா மாவட்ட த்தில் தலையாய அணையாக விளங்கும் கல்லணையில் உலக சாதனைக்காகவும் கல்லணையைக் கட்டிய கரிகால் பெருவளத்தான், காவிரித்தாய், மற்றும் விவசாயிகளை பெருமை ப்படுத்தும் விதமாக தஞ்சை கலை பண்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் 'பசுமையும் பரதமும் 2022' நிகழ்ச்சி இன்று காலை கல்லணையில் நடைபெற்றது.

    கல்லணையில் உள்ள மாமன்னன் கரிகாலன் சிலையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று பாலங்களின் மேல்சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு நாட்டிய கலைஞர்கள் பச்சை ஆடையில் அணிவகித்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் திருச்சி மேயர் அன்பழகன், தஞ்சை மேயர் சண்.ராமநாதன் மற்றும் சிவசக்தி அகாடமி, ஆடல் வல்லான் இசை நாட்டியாலயா, காவிரி கலை அரண் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சுற்றுவட்டார பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கலந்து கொண்ட 1000 பரத கலைஞர்கள் அனைவரும் பசுமை உடை அணிந்து நாட்டிய அபிநயம் பிடித்து ஆடினார்கள்.

    இதை காலை நேரத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் பாலங்களில் வழியாக கடந்து சென்ற மக்கள் பார்த்து ரசித்தனர்.

    Next Story
    ×