கந்தூரி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நாகூருக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

2-ந்தேதி மற்றும் 11-ந்தேதி அன்று கூடுதலாக 100 சிறப்பு பஸ்கள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இச்சிறப்பு பஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
கந்தூரி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நாகூருக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழா வருகிற 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ந் தேதி சந்தனகூடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாகூர் கந்தூரி திருவிழாவை காண ஏராளமான பொதுமக்கள் வருகைதர உள்ளனர். அதனை முன்னிட்டு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நாளை (ஞாயிறு) முதல் 12-ந்தேதி வரை சென்னை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், இராமநாதபுரம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்தும், நாகப்பட்டினம் நாகூர் மற்றும் காரைக்கால் நாகூர் வழித்தடத்திலும் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும், தற்காலிக வாகன நிறுத்தம் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலிருந்து நாகப்பட்டினம் தொழிற்பயிற்சி நிலைய மைதானம் வாகன நிறுத்தம், வெண்ணாற்றாங்கரை வாகன நிறுத்தம் மற்றும் இரயில் நிலையம் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் வட்ட பஸ் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தினசரி இயக்கப்பட்டு வரும் 127 பஸ்கள் வாயிலாக 335 நடைகளுடன் 2-ந்தேதி மற்றும் 11-ந்தேதி அன்று கூடுதலாக 100 சிறப்பு பஸ்கள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பஸ் இயக்கத்தினை ஒருங்கிணைக்க நாகூர் மற்றும் நாகப்பட்டினம் பஸ் நிலையங்களில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இச்சிறப்பு பஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com