search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
    X

    காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

    • பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடம் காலி
    • நேரிலும், தபால் மூலமாகவும், இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் சகி}ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடத்துக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது:அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் "சகி} ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகின்றது. அதில் பணிபுரிய கீழ்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்களுக்கு 8 வது தேர்ச்சி (அ) 10 வது தேர்ச்சி, தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்இதற்கு 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும், சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளுரை சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு ரூ.6,400}யும், பாதுகாவலர் பணிக்கு ரூ.10,000}மும் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அரியலூர் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: ஒருங்கிணைந்த சேவை மையம், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்தா மருத்துவம் எதிரில், அரியலூர்} 621704 என்ற முகவரிக்கு 23.03.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

    Next Story
    ×