search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி செல்வத்தை மட்டும் யாராளும் எடுத்து செல்ல முடியாது - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய போது எடுத்தபடம்.

    கல்வி செல்வத்தை மட்டும் யாராளும் எடுத்து செல்ல முடியாது - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    • திருச்செந்தூர் அருகே புனித ஜோசப் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது
    • முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சொன்னதை போல் லட்சியத்தை அடைய கனவு காண வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே புனித ஜோசப் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையம் இயக்குனர் பிரொமில்டன் லோபோ வரவேற்று பேசினார்.

    விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பள்ளி மாணவ, மாணவிகள் 65 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கி பேசியதாவது:-

    தமிழ்நாடு 2-வது இடம்

    சுகாதாரமும், கல்வியும் இரு கண்கள் என்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்தை, கல்வியை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். கல்வி செல்வத்தை மட்டும்தான் யாரும் எடுத்து செல்ல முடியாது. அது உங்களோடே இருக்கும்.

    கல்வி வளர்ந்தால் தான் ஒரு நாடு வளரும். கடலோர மக்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை நிறுவிய பெருமை இந்த கல்வி நிறுவனத்திற்கு உண்டு. இந்தியாவிலேயே கல்வியில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது பள்ளிக்கு வராத மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக, மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

    எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் சத்தான வகையில் மாணவ, மாணவிகள் இருக்க வேண்டும் என்பதற்காக முட்டைகள் வழங்கி உண்மையான சத்துணவு திட்டமாக மாற்றினார்கள். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறுபான்மையின மக்களை காக்கின்ற அரசாக விளங்கி வருகிறது.

    ஆசிரியரின் வழிகாட்டுதல்

    முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சொன்னதை போல் லட்சியத்தை அடைய கனவு காண வேண்டும். மாணவர்களாக இருக்கின்ற நீங்கள் தாய், தந்தையரின் சொல்லை கேட்டும், அதுபோல ஆசிரியரின் வழிகாட்டுதலின் படியும் சிறப்பாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், திருச்செந்தூர் யூனியன் வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்தில் ரூ. 28 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் 6 புதிய விநியோக மின் மாறிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், வாமணன், மண்டல துணைத் தாசில்தார் தங்கமாரி, அடைக்கலாபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரம்மநாயகம், திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் அன்றோ, வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி, வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணை தலைவர் ஜெகதிஷ் வி. ராயன், வீரபாண்டியன்பட்டினம் (ரூரல்) பஞ்சாயத்து தலைவர் வசந்தி, மாநில தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவை தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், உதவி செயற்பொறியாளர் பேச்சுமுத்து, கட்டுமான மற்றும் மேம்பாட்டு பொறியாளர் ராம்மோகன், உதவி பொறியாளர்கள் முத்துராமன், ராஜா ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×