ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் - உ.பி.யில் 8 பேர் கைது

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டெபிள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #VivoIPL #CricketBetting
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் - உ.பி.யில் 8 பேர் கைது
Published on

கைதால்:

ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காசியாபாத் பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் டெல்லியில் போலீஸ் கான்ஸ்டெபிளாக பணியாற்றி வருகிறார்.

அவர்கள் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி - பெங்களூரு இடையேயான போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனையின்போது ரூ.1.4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவர்கள் வாட்ஸ் அப் மூலமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் அரியானா மாநிலத்தில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #VivoIPL #CricketBetting

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com